
சென்னை மயிலாப்பூரில் அமைந்துள்ள சடலாடும் விநாயகர் கோயிலின் இரண்டாம் ஆண்டு கும்பாபிஷேக விழா,கோவிட் கெடுபிடிக்குநடுவிலும் அழகாக,அமைதியாக, ஆன்மீக மணத்துடன்நடைபெற்றதுஅந்த ஆதிமூலமான அந்தவிநாயக பெருமானின் அருளால் தான் என்றால் அது மிகையாகாது. மூர்த்தி சிறியது கீர்த்தி பெரியது என்றார் போல சிறிய கோவிலானாலும் மிகத்தொன்மையான இதன் தெய்வீக அருள் பிரகாசம் அற்புதமானது.
இரண்டு வருடங்களுக்கு முன்பு கும்பாபிஷேகத்தை கோலாகலமாக எடுத்து நடத்தி வைத்த திருமதி சீதா கிஷோரின் அசைக்க முடியாதபக்தியின்பலனாக இந்த விழாவும் மிகச் சிறப்பாகநடைபெற்றது.திருராமலிங்க குருக்கள் அவர்களின்அபிஷேகஅலங்காரஆராதனைகள் அதிவிமரிசையாக நடந்தேற திருவையாறு திரு பஞ்சாபகேச சாஸ்திரிகளும் அவர் குமாரன் திரு சதீஷும் அதி கம்பீரமாக ருத்ரம், சமகம்முதலியவேத மந்திரங்களை ஓத, கும்பாபிஷேகம் இனிதே நடைபெற்றது. மகேசன் சேவையையே தன் வாழ்க்கையின் நெறியாக நடத்திவரும் திருமதி சீதாகிஷோர்,தீர்த்த கலசங்களுக்கு நறுமலர் குவியல்களால்பூஜித்துஅபிஷேகம் செய்ததை கணிசமான ஆன்மீக அன்பர்கள் கண்டுகளித்தனர்.
கண்ணுக்கு விருந்து, ஆன்மாவிற்கு அருமருந்து, இவற்றோடு வயிற்றுக்கும் அதி விமரிசையாக பிரசாதம் வழங்கப்பட்டு கும்பாபிஷேகத்தை அந்த தும்பிக்கையான் நடத்திக் கொண்டான்.18 மாதங்களாக கொடிய நோயின் தாக்கத்தில் சிறைப்பட்டிருந்த பக்தர்களுக்கு ஒரு நம்பிக்கை ஒளியாக இந்த விழா அமைந்தது.
திருமதிராஜீமணி