புத்தி கிளினிக் தனது 10ஆம் ஆண்டு நிறைவு விழாவை கொண்டாடியது

சிறப்புப் பேச்சாளர் – திரு. அனுராக் சர்மா,  M.P.லோக்சபா மற்றும் இயக்குநர் – Baidhyanath குழுமம். புரொபசர் பர்மீந்தர் சச்தேவ் – நியூரோ சைக்காட்ரி இன்ஸ்டிட்யூட், சிட்னி, ஆஸ்திரேலியா வேணு ஸ்ரீநிவாசன், சேர்மன், TVS Motor Company Ltd.

உலக அரங்கில், இறப்போர் எண்ணிக்கை, 9.0 மில்லியனில், இறப்பிற்கான காரணங்களில், மாரடைப்பிற்கு அடுத்தபடியாக அணிவகுத்து நிற்பது நியூரோலாஜிகல் உபாதைகள்!

நியூரோலாஜிகல் மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்கள்தான், குறைபாடோடு வாழவேண்டிய ஓர் அவல நிலையினை ஏற்படுத்துகின்றன. அமெரிக்கா போன்ற வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கும் இது பொருந்தும்.
Buddhi Clinic

மூளை மற்றும் மனவளம் சம்மந்தப்பட்ட நோய்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும் சீர்நிலையை மீண்டும் அமுல்படுத்துவதிலும் இந்நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளில் அரிய பல சாதனைகளை ஆற்றி வந்துள்ளது.

டிசம்பர் 3 ஆம் தேதி 2009-இல் நிறுவப்பட்ட இந்த ஸ்தாபனம் – உடம்பு, மூளை, மனவளம் ஆகிய மூன்று ‘கோள்களை’ 360° கோணத்தில் ஆராய்ந்தறிந்து பல தரப்பட்ட வயதினருக்கும் திடமான தீர்க்கமானதொரு சிகிச்சை முறையை அமைத்துக் கொடுத்து உபாதைகளிலிருந்து விடுபடுவதற்கான வழிமுறையையும் செயலாற்றிச் சிறப்பாகச் செயல் புரிந்து வந்துள்ளது! கடந்த 10 ஆண்டுகளில், 10000 திற்கும் மேற்பட்டோருக்கு சிகிச்சை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது! 1,00,000 மேற்பட்ட விஞ்ஞான ரீதியிலான செயல்பாடுகள் அமுலாக்கப்பட்டுள்ளன.

அனுராக் சர்மா
Buddhi Clinic-க்கின் பணி சிறப்பானது. உலக நோக்கில் செயல்படும் Made in India வழிமுறை.

வேணு ஸ்ரீநிவாசன்
சேவையின்றி உடல்நலம் பேண இயலாது!
(There can be no health care without service)
இவர்களது செயல்பாட்டு வாசகம், என்னைப் பரவசத்திலாழ்த்தியது!
புரொபசர் பர்மீந்தர் சச்தேவ்

122 ஆண்டுகள் – அதிகபட்ச மனிதனின் வாழ்நாட்கள், இந்நாள் வரை, 150 ஆண்டுகள் வாழ்வதற்காக வாய்ப்புகள் – உடன்பாடு மற்றும் எதிர்மறை ரீதியிலான கருத்துரையாடலிது!
Buddhi Clinic – நிறுவனர், திரு. புரொபசர் Dr.E.S.Krishnamoorthy-யின் கருத்து

இந்த சிகிச்சை முறையின் 5 அடித்தளங்கள்.
1. க்ளாஸ்நாஸ்ட் (Glasnost)
2. கொலாபரேஷன் (Collaboration)
3. லீடர்ஷிப் (Leadership)
4. பெரிஸ்ரோகியா (Perestroika)
5. இன்னவேஷன்/ரிசர்ச் (Innovation/Research)

உடானடியாகச் சென்று சிகிச்சை அளிக்கும் ‘Buddhist On Wheels’ என்கிற Mobile Therapy சேவையும் Buddhi Clinic-இல் உண்டு.

Author: nammamadrasnews

Leave a Reply