மயிலை வீர ஆஞ்சநேய கோயிலில் ஸ்ரீஜயந்தி உத்ஸவம்

மயிலை ஸ்ரீ வீர ஆஞ்சநேய கோயிலில் ஸ்ரீஜயந்தி உத்ஸவம் 5 நாட்கள் அதி விமரிசையாக நடைபெற்றது. கோவில் சிறிது கீர்த்தி பெரிது என்பது போல் மிகப்பழமையான இக்கோவிலில் ஸ்ரீ ஆஞ்சநேயர், ஸ்ரீராமர், ஸ்ரீ வெங்கடேச பெருமாள் , ஸ்ரீ அலமேலு மங்கை தாயார் , ஸ்ரீ கிருஷ்ணர் என்று அத்தனை சன்னதிகளும் அன்றாட அலங்காரங்களுடன் அழகாக வீற்றிருந்தாலும் விழாக்காலங்களில் அர்ச்சர்கர்களின் கைவண்ணத்தில் அற்புத அலங்காரத்தில் சேவை தருவது சென்னை பக்தர்களின் பெரும் பாக்கியம் எனலாம். இந்த வகையில் ஸ்ரீ ஜெயந்தி விழாவை 5 நாள் உத்வஷமாக அதிவிமரிசையாக கண்ணனின் பல்வேறு லீலா விநோதங்களை சித்தரிக்கும் வகையில் அலங்காரங்களை செய்து பக்தர்களை பரவசம் செய்தனர் அர்ச்சக சுவாமிகள்.

இக்கோவிலில் பக்தி சிரத்தையுடன் கைங்கர்யம் செய்து கொண்டிருக்கும் அர்ச்சக ஸ்வாமிகள் வெண்ணைத் தாழி திருடுவது முதல் பின்பு கோவர்தன கிரி வரையிலான காட்சிகள் என 5 நாட்களும் ஐந்து வித அலங்காலரங்களை சேவை படுத்தி கண்ணனின் லீலா விநோதங்களை கண்ணெதிரே காட்டி பக்தி வெள்ளத்தில் மூழ்கடித்த ஸ்தல அர்ச்சக சுவாமிகளை சிரம் தாழ்த்தி வணங்கி வாழ்த்தி நிற்கின்றோம். வளர்க உம் திருச்சேவை

என்றும் உன் அடியேன்

ராஜிமணி

Author: nammamadrasnews

Leave a Reply