ஶ்ரீ க்ருஷ்ணா கான சபையில் ஶ்ரீ ஶ்ரீ ஶ்ரீ விட்டல்தாஸ் மகாராஜின் பஜனாம்ருத சாகரம்

சாதக பக்ஷி மேகக் கூட்டத்திலிருந்து விழும் ஒரு துளி நீருக்குக் காத்திருப்பது போல் இரண்டு வருடங்களாக அதி பயங்கரமான நோய், புயல், மழை, பெருவெள்ளம் போன்ற பெரும் இடர்களிலிருந்து எப்பொழுது பாப விமோசனம் வருமோ என்று துவண்டு போய் காத்திருந்த ஆன்மீக அன்பர்களுக்கு இந்த ஆண்டு மார்கழி மகோத்சவங்கள் மீண்டும் துளிர்விட்டு மலரத் தொடங்கியதற்கு பரமாத்மாவிற்கு முதற்கண் அனந்த கோடி நமஸ்காரங்கள்.

விடியல் காலை உதிக்கும் சூரிய பகவான் கூட ஸ்தம்பித்து போகும்படி ஶ்ரீ க்ருஷ்ணா கான சபையில் நடந்து வரும் “ஶ்ரீ ஶ்ரீ விட்டல்தாஸ் மகராஜின்” நாம சாகர வெல்லம் பெருக்கெடுத்து ஓடுவது நமது பாக்கியமே! இது பக்தர்களின் ஊனையும், உயிரையும், உள்ளத்தையும் உலுக்கி எடுத்து அவர்தம் கண்ணீர் வெள்ளமே பெரும்வெள்ளமாக நிறைகின்றது. இந்த புனித வெள்ளம், கங்கை நீரை போல நமது ஜன்ம, ம்ருத்யு, ஜரா, வ்யாதிகளை தகர்த்தெறிந்து புத்துயிர் அளிக்கின்றது என்பது உண்மை.

உத்தரை வயிற்றில் கரிக்கட்டையாக இருந்த பரிக்ஷத்தை ரக்ஷித்தது போல சம்சார கோர சாகரத்தை தாண்டும் ஒரு ஓடமாக நம் குருமகராஜை நமக்கு அளித்த ஆண்டவனுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.

அதிகாலை 7 முதல் 9 வரை பகவத்குண வைபவங்களையும் பாகவத் குண பெருமைகளையும் அவர்தம் அசைக்கமுடியாத தாஸ பக்தியின் அனுபவங்களையும் பல பல கோணங்களிலிருந்து வீடியோ படம் போல ப்ரத்யக்ஷமாக பக்தர்களின் கண்ணெதிரே நடமாடவிட்டது நெஞ்சை நெகிழவைக்கிறது. இந்த குருமராஜக்கு எத்தனை பிறவி எடுத்தாலும் க்ருதஞ்ஞைய கூறமுடியாது.

நம் குருமகராஜிர்க்கும் இரண்டு வருடமாக பக்த கோடிகளை பார்க்காத ஏக்கம் இருந்திருக்கும்போலும்….. இதன் விளைவு — அவரது குரலின் வலிமை மெருகு ஏறி, அதி கம்பீரமாக, வானத்தைபிளந்து அந்த வைகுண்ட லோகத்தில் அரிதுயில் கொண்டிருக்கும் அனந்த பத்மநாபனையே விழிக்கச் செய்து கிருஷ்ணா கான சபையின் ஒரு நாற்காலியில் அமரச் செய்திருக்கும் என்பது சத்தியவாக்கு.

ஒரு வ்ருத்தா சுரணின் துதியை நூலாக்கி ப்ரஹலாத ஸ்வாமி, த்ருவ ஸ்வாமி, ஶ்ரீநாரத ஸ்வாமி இவர்களை தறியாக்கி மகா பக்தர்களாக உலகிற்கு விஜயம் செய்த அடியார்க்கு அடியார்களின் பாடல்களை ஜொலிக்கும் ஜரிகை ஆக்கி அற்புத அதிசயத்தக்க காஞ்சிபுரம் பொன்னாடையாக்கி அளிக்கும் ஆற்றல் கொண்ட ஶ்ரீ மகராஜ் அவர்களுக்கு கோடான கோடி நமஸ்காரங்கள்.

அன்று ஆஞ்சநேயர் ஸ்வாமி எப்படி சீதா பிராட்டி உடலையும் உயிரையும் உள்ளத்தையும் ரக்ஷித்தாரோ, அதேபோல் இந்த நூற்றாண்டிற்கு பரமன் அளித்த பெருஞ்செல்வமான குருநாதரிடம் நாம் விண்ணப்பிப்பது இது ஒன்று தான். 

“என்றைக்கும் ஏழ்பிறவிக்கும் உம் தன்னோடு உற்றோமே ஆவோம், உமக்கே நாம் ஆட்செய்வோம், 

மற்றை நம் காமத்தல் மாற்றிடுவீர் குருதேவா…..”

பக்தி வயலில் செஞ்நெல் விளைவித்து நம் ஆன்மாவிற்கு அன்னதானம் அளிக்கும் பணியைத்தவிர, சனாதன தர்மம் எனும் கோட்டையைப் பாதுகாக்கும் பரம உத்தமமான பணியை சேர்த்துச் சேர்த்து இவர் செய்யும் பாங்கி அதி அத்புதமான வாக் சாதுர்யத்திற்கு ஒரு எடுத்துக்காட்டு. 

Not only this, any student of Indian languages has to just sit in his lectures….. He will certainly drink the amrutha of the mind-boggling beauty and depth of parallels from the poetic ecstasy of all the saints who have left their footprints on the sands of this amulya, ananda and akanda soil of our Bharatha Bhoomi. As the poem goes, “Like Abubem Adam!” May your tribe ever ever increase. (That includes his most devoted, disciplined, loyal, young and very well-trained shishyas.)

Rajee Mani

Author: nammamadrasnews

Leave a Reply